கேரட் தக்காளி சூப் செய்ய தேவையான பொருட்கள்:
கேரட் – 2
தக்காளி – 2
வெங்காயம் – 1
பிரஞ்சு பீன்ஸ் – 5
பூண்டு – 4
சீரகத் தூள் – ½ தேக்கரண்டி
பெருங்காயத் தூள் – ஒரு சிட்டிகை
கருப்பு மிளகு தூள் – 3 மேஜைக்கரண்டி
தண்ணீர் – 2 கப்
ஆலிவ் எண்ணெய் – அரை தேக்கரண்டி
கருப்பு உப்பு – ருசிக்கேற்ப
முதலில் கேரட், வெங்காயம், தக்காளி, பூண்டு, பிரஞ்சு பீன்ஸை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும்.
பின்பு அடுப்பில் குக்கரை வைத்து, அதில் நறுக்கிய கேரட், தக்காளி, வெங்காயத்தூள், பூண்டு, பிரஞ்சு பீன்ஸ் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றியபின், முடி வைத்து, 3 விசில் வரும் வரை நன்கு வேக வைத்து இறக்கி ஆற வைத்து நன்கு மசித்து கொள்ளவும்.
மேலும் அடுப்பில் வாணலியை வைத்து அதில் சிறிதளவு ஆலிவ் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் சீரகத் தூள், உப்பு சேர்த்து, மசித்து வைத்த கேரட் கலவையை சேர்த்து, சில நிமிடம் லேசாக கொதிக்க வைக்க விடவும்.
பிறகு கொதிக்க விட்ட கலவையுடன், மிளகு தூள், கருப்பு உப்பை சேர்த்து, நறுக்கிய கொத்தமல்லி இலையை அதன் மேல் லேசாக தூவியபின், இறக்கி வைத்து சூடாக பறிமாறினால் ருசியான கேரட் தக்காளி சூப் ரெடி.