சென்னை, தலைமைச் செயலகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்பும் பொருட்டு தகுதியான நபர்களிடமிருந்து 25.01.2021 முதல் 14.02.2021 வரை இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை காலிப்பணியிடங்கள்:
அலுவலக உதவியாளர் – 12
அலுவலக உதவியாளர் வயது வரம்பு:
01.01.2020 அன்றுள்ளவாறு 18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும். வயது தளர்வு பற்றிய விவரங்களை அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
தமிழ்நாடு அடிப்படை பணி விதிகளுக்கான சிறப்பு விதி, விதி 5(2)(ய)ன்படி அங்கீகாரம் பெற்ற பள்ளியில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும் மற்றும் தமிழில் எழுதப் படிக்க தெரிந்திருக்க வேண்டும்
TNRD சம்பளம்:
ரூ.15700 – 50000/-(Level-1) என்ற சம்பள ஏற்ற முறையில் அரசு நிர்ணயம் செய்யும் படிகளுடன் வழங்கப்பட உள்ளது.
TNRD தேர்வுச் செயல் முறை:
விண்ணப்பத்தார்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல்மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
அலுவலக உதவியாளர் விண்ணப்பிக்கும் முறை:
https://tnrd.gov.in/ என்ற இணைய முகவரிமூலம் 14.02.2021 வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.