தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து நடிகை கஸ்தூரி ட்விட்டரில் விமர்சித்துள்ளார்.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா கடந்த ஜனவரி 27-ஆம் தேதி விடுதலை செய்யப்பட்டார். பெங்களூருவில் உடல்நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த அவர், இன்று தமிழகம் திரும்பினார்.
அவருக்கு தமிழக எல்லையில் ஆரவார வரவேற்பு அளிக்கப்பட்டது. அதுமட்டுமன்றி சசிகலாவை வரவேற்று பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகம் முழுவதிலும் பலத்த போலீஸ் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதனைத் தொடர்ந்து நடிகை கஸ்தூரி தமிழக அரசின் தற்போதைய நடவடிக்கைகள் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “நினைவகத்தை மூடிட்டாங்க, அலுவலகத்தை மூடிட்டாங்க, பிரசாரக் கூட்டம் ரத்து, சாலைகளை மூடு ராங்க, டிவி கூட நிறுத்திட்டாங்க. ஷும் covid க்கு நிறுத்த வேண்டிய தெல்லாம் சசிகலாவுக்கு செய்யுறாங்க. பேசாம சின்னம்மா கொஞ்சம் டாஸ்மார்க்கு பக்கம் காரை திருப்புனாகன்னா புண்ணியமா போகும்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.