சீமான் தன்னுடைய மகனின் காதணி விழாவிற்கு தனது கட்சியின் தொண்டர்களுக்கு அழைப்புவிடுத்துள்ளார் .
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 2013 ஆம் வருடம் முன்னாள் சட்டப்பேரவை தலைவர் காளிமுத்துவின் மகள் கயல்விழி என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. இந்த குழந்தைக்கு பிரபாகரன் என்ற பெயரைச் சூட்டியுள்ளார். இந்நிலையில் சீமான் தன்னுடைய குழந்தைக்கு காதணி விழாவை நடத்த உள்ளதாக அறிவித்துள்ளார். இது குறித்த வீடியோவில் பேசிய சீமான் நாம் தமிழர் கட்சி தொண்டர்கள் இந்த விழாவில் கலந்துகொள்ள அழைப்பு விடுத்துள்ளார்.
அன்பின் அழைப்பில் மகிழும்
உங்கள் சீமான் pic.twitter.com/CvZlbOOrGx— சீமான் (@SeemanOfficial) February 7, 2021
அந்த அழைப்பிதழில், “வருகிற மாசி 3ஆம்(பிப்-15) தேதி திங்கட்கிழமை காலை 10 மணி அளவில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார் கோவிலுக்கு பக்கத்தில் முடிக்கரை கிராமத்தில் அமைந்துள்ள எங்கள் குலதெய்வமான வீரகாளி அம்மன் கோவிலில் வைத்து என்னுடைய அன்பு மகனுக்கு முடி இறக்கி காதணி விழா நடைபெற இருக்கிறது. எனவே என் உயிரினும் இனிய உடன் பிறந்தவர்கள், அன்பு உறவுகள், தம்பிகள், தங்கைகள் அனைவருமே அழைப்பாக ஏற்று இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க வேண்டும் என்று அன்போடு வேண்டுகிறேன்” என்று கூறியுள்ளார்.