வேலன்டைன் வாரத்தின் ஐந்தாவது நாளன்று வாக்குறுதி தினம் எப்படிக் கொண்டாடப் படுகிறது என்பதை காணலாம்.
காதலர் தினம் உலகம் முழுவதும் உள்ள காதலர்களால் பிப்ரவரி 14 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த காதலர் தினத்தன்று காதலர்கள் தங்களுக்கிடையில் ரோஜா பூக்களை, வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை பரிமாறி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டு காதலர் தினத்தை கொண்டாடுவார்கள்.
அந்தவகையில் பிப்ரவரி 7ஆம் தேதி தொடங்கி பிப்ரவரி 14-ஆம் தேதி வரை வேலன்டைன் வீக் கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த வேலன்டைன் வாரத்தின் ஐந்தாவது நாளன்று வாக்குறுதி தினம் கொண்டாடப்படுகின்றது. இதனை ப்ராமிஸ் டே எனவும் அழைப்பர். இந்த நாளன்று காதலன் காதலியிடம் வாக்குறுதியை பரிமாறிக் கொள்வர். அந்தவகையில் வாக்குறுதியை பரிமாறிக்கொள்ள சில யோசனைகள்:
- இந்த வாழ்க்கையில் உனக்கு நான் நண்பரை போன்று எல்லாமாகவும் இருப்பேன் என்று சத்தியம் செய்யலாம்.
- எந்த சூழ்நிலை வந்தாலும் நான் உன் பக்கம் நின்று உனக்கு ஆதரவாக இருப்பேன்.
- ஒற்றுமையுடன் நான் உன்னுடனே கடைசி வரை வாழ்வேன் மற்றும் நேர்மையுடன் உன்னிடம் நடந்து கொள்வேன். மேலும் ஐ லவ் யூ என்ற வார்த்தையைக் கூறி உங்கள் அன்பை பரிமாறிக் கொள்ளலாம்.