Categories
அரசியல் மாநில செய்திகள்

ஸ்டாலின் சொல்லுறத செய்யுறாரு….! எடப்பாடி தானாக செய்ய மாட்டார்… அதிரடி காட்டிய கே.எஸ் அழகிரி …!!

திமுக தலைவர் மு.க ஸ்டாலின் சொல்வதைத் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்து வருகிறார் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார்.

சென்னை கொடுங்கையூர் குப்பை வளாகத்தை அகற்றக் கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. வட சென்னை மேற்கு மாவட்ட தலைவர் சிப்பிங் டெல்லிபாபு தலைமையில் நடைபெற்ற இந்த கையெழுத்து இயக்கத்தை கே.ஸ் அழகிரி தொடங்கி வைத்தார். பின்னர் மேடையில் பேசிய அவர் தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக ஆட்சிக்கு வந்தால் விவசாய கடன்களை ரத்து செய்யப்படும் என ஸ்டாலின் அறிவித்ததை குறிப்பிட்டார்.

ஸ்டாலின் சொல்வதைத் தான் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திட்டங்களாக அறிவித்து வருகிறார் எனவும் கேஸ் அழகிரி விமர்சித்தார். மேலும் பேசிய அவர், ஸ்டாலின் சொல்லி நான் விவசாய கடனை தள்ளுபடி செய்யவில்லை என்று எடப்பாடி சொல்லுகிறார். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் ஏன் அவர்கள் ஸ்டாலின் சொல்வதற்கு முன்பே இதை செய்யவில்லை.

அவரிடம் அதிகாரம் இருக்கிறது, அவர் நினைத்தால் இந்த போராட்டம் தொடர்ந்தது முன்பே  இதனை தள்ளுபடி செய்து இருக்கலாம். சட்டமன்றத்துல பலமுறை எதிர்க்கட்சிகள் இதை எழுப்பினார்கள். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் விவசாயிகள் இதற்காக குரல் கொடுத்தார்கள். அப்பொழுதெல்லாம் தள்ளுபடி செய்யாத முதலமைச்சர் இன்றைக்கு ஸ்டாலின் அவர்கள் சொன்ன பிறகு தள்ளுபடி செய்து இருக்கிறார் என்றால் நான் நிச்சயமாக சொல்லுவேன். ஸ்டாலின் சொன்ன காரணத்தினால் தான் எடப்பாடி இதை செய்திருக்கிறார்

Categories

Tech |