தமிழில் முழக்கமிட்டு தமிழை தவறாக எழுதிய தமிழக MP ட்வீட் வைரலாகி வருகின்றது.
நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றது. வெற்றிபெற்ற தமிழக MP_க்கள் மக்களவை பதவி ஏற்பு விழாவில் தமிழில் முழக்கங்கள் எழுப்பி பதவி ஏற்றுக் கொண்டது அரசியல் விவாதமாக மாறியது. மேலும் தமிழக MP_க்கள் முழக்கத்திற்கு எதிராக பிஜேபி_யினர் ஜெய்ஸ்ரீராம் என்ற முழக்கமும் எழுப்பினார்கள்.
இந்நிலையில் திமுக சார்பில் தர்மபுரி மக்களவை தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற செந்தில் குமார் இன்று தனது ட்வீட்_டர் பக்கத்தில் ஒரு பதிவு போட்டிருந்தார். அதில் உலக கோப்பை போட்டி நடைபெற்ற மைதானத்தில் ரசிகர் ஒருவர் “தமிழ் வாழ்க” , தந்தை பெரியார் வாழ்க என்ற வாசகத்தை கையில் வைத்து இருந்த புகை படத்தை பதிவிட்டிருந்தார்.
மேலும் அந்த ட்வீட்_டில் இது போன்று ரசிகர்கள் கையில் வைத்திருப்பதை ஆதரிக்கின்றேன் என்றும் , #திராவிடம்_வெல்க , #பெரியார்_புகழ_ஓக்குக, #கலைஞர்_புகழ்_ஓக்குக, #தமிழ்_வாழ்க. என்று தவறாக பதிவிட்டிருந்தார். இது சமூக வலைதளத்தில் வைரலாகியது. மேலும் சிலர் இதை சரியாக பதிவிடவும் என்று சுட்டிக்காட்டிய பின்பு ஓங்குக என்று மாற்றினார்.
I encourage friends who are watching the Cricket World cup matches at the stadium to hold placards like #திராவிடம்_வெல்க , #பெரியார்_புகழ_ஓங்குக, #கலைஞர்_புகழ்_ஓங்குக, #தமிழ்_வாழ்க. Take a photo and post it on Twitter.😊🙏 pic.twitter.com/3J7gScWCEf
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) June 30, 2019