தமிழகம் முழுவதும் 9 மற்றும் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சத்து மாத்திரை வழங்க உள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தபட்டதால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதையடுத்து ஆங்லினே வழியாக மாணவர்களுக்கு பயிற்றுவிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாணவர்கள் நலன் கருதி இந்த பாடத்தை 40% குறைத்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வாரத்தில் 6 நாட்களும் பள்ளிகள் செயல்படுகிறது. இதையடுத்து பிப்ரவரி மாதத்தில் பள்ளிகள் இயங்குவது குறித்து அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்நிலையில் 9 & 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் தொடங்கபட்டுள்ளது. இதையடுத்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறந்தவுடன் நோய் எதிர்ப்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இதேபோல 9 மற்றும் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கொரோனா பரவலை தடுக்க நோய் எதிர்ப்பு சத்து மாத்திரைகள் வழங்க பள்ளிக் கல்வித்துறை ஏற்பாடு செய்துள்ளது. அதன்படி தமிழகம் முழுவதும் 19 லட்சம் மாணவர்களுக்கு நாளை மறுநாள் முதல் பள்ளிகளில் சத்து மாத்திரைகள் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.