திருப்பத்தூர் அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா என்று செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு சசிகலா பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறியுள்ளார்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் சசிகலா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அப்போது தொண்டர்களுக்காக தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும், எம்ஜிஆர் வழிவந்த ஒரு தாய் வயிற்றுப் பிள்ளைகள் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கூறினார். தமிழுக்கும், தமிழ் மக்களுக்கும், தொண்டர்களுக்கும் நான் அடிமை என்றும், ஆனால் அடக்குமுறைக்கு நான் என்றும் அடிபணிய மாட்டேன் என்று கூறினார்.
ஜெயலலிதா நினைவிடம் மூடப்பட்டதற்கு காரணம் என்ன என்பது மக்களுக்கு நன்றாக தெரியும். அதிமுக கொடியை பயன்படுத்த கூடாது என்று உங்கள் மீது அமைச்சர்கள் தொடர்ந்து புகார் கொடுக்கிறார்கள் என்று கேள்விக்கு அது அவர்களது பயத்தை காட்டுகிறது என கூறினார். அதிமுக அலுவலகத்திற்கு செல்வீர்களா என்ற கேள்விக்கு பொறுத்திருந்து பாருங்கள் என்று கூறினார். அதிமுக கைபற்றுவீர்களா? என்ற கேள்விக்கு மிக விரைவில் உங்களை சந்திக்கிறேன். அப்போது விரிவாக இதைப் பற்றி பேசுகிறேன் என கூறினார்.