வாகன சோதனையில் ஈடுபட்ட காவலரிடம், குடிபோதையில் தகராறு செய்த நபர் கைது செய்யப்பட்டார்.
திருப்பூர் மாவட்டம் எஸ்.ஏ.பி சிக்னல் அருகில் வாகன போலீசார் சோதனையில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக குடிபோதையில் இருசக்கர வாகனத்தில் வந்த நபரை போலீசார் மடக்கிபிடித்து விசாரிக்க முயன்றுள்ளார். அப்போது அந்த நபர் போலீசாரிடம் போதையில் தேவையற்ற வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
தேவையற்ற வார்த்தைகளை பயன்படுத்தியதற்காக போக்குவரத்து காவலர் பொன்னாங்கன் அவரை தாக்கியதாக கூறப்படுகிறது.இதனால் கோபம் அடைந்த அவர் காவலரின் சட்டையை பிடித்து தகராறில் ஈடுபட்டுள்ளார் .இதையடுயட்த்து போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் சாமூண்டிபுரத்தை சேர்ந்த முரளி என்பது விசாரணையில் தெரியவந்தது.