கல்லட்டி மலைப்பாதையில் பயணிக்க வெளிமாவட்ட ,வெளிமாநில வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் ஊட்டியிலிருந்து கூடலூர், கர்நாடகாவின் குண்டல்பேட், மைசூர் ஆகிய இடங்களுக்கு செல்ல தேசிய நெடுஞ்சாலை உள்ளது.இதுபோன்று மசினகுடி வழியாக முதுமலை மற்றும் மைசூர் செல்ல கல்லட்டி மலைப்பாதை இருக்கிறது. கூடலூர் வழியாக செல்வதை காட்டிலும், இந்த வழியாக செல்வதால் தூரம் குறைவு என்பதால் பெரும்பாலான வாகனஓட்டிகள் கல்லட்டி சாலையை பயன்படுத்தி வந்தனர். அபாயகரமான குறுகிய வளைவுகளை கொண்ட கல்லட்டி மலைப்பாதையில் வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு வாகனங்களை இயக்க தெரியாததால் விபத்துகள் அதிகமாக ஏற்பட்டது.
இந்நிலையில் கல்லட்டி மலைப்பாதையில் பயணிக்க வெளிமாவட்ட, வெளிமாநில வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 2018ல் அப்பகுதியில் கார் பள்ளத்தில் கவிழ்ந்து 5 பேர் பலியானதை அடுத்து வாகன போக்குவரத்திற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. இந்நிலையில் முதற்கட்டமாக இலகுரக வாகனங்கள் மட்டும் கல்லட்டி மலைப்பாதையில் பயணிக்க அனுமதிக்கப்பட்டு உள்ளது.