Categories
கேரளா மாநிலம்

“ஊழியர்களுக்கு ஒன்-டைம் சிறப்பு போனஸ்”… ஹெச்.சி.எல் நிறுவனம் அறிவிப்பு…!!

ஹெச்.சி.எல் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 700 கோடி ரூபாய் மதிப்புள்ள ஒன் டைம் சிறப்பு போனஸ் வழங்க உள்ளது.

தமிழகத்தை சேர்ந்த ஷிவ் நாடார் தொழிலதிபரால்  தொடங்கப்பட்ட நிறுவனம் நொய்டாவைத் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்று ஹெச்.சி.எல் நிறுவனம் சென்ற ஆண்டில் கொரோனா பாதிப்புகளையும் தாண்டி சிறந்த தொழில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

2020 ஆம் ஆண்டின் புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக, தனது நிறுவன பணியாளர்களுக்கு 700 கோடி மதிப்புள்ள ஒன்-டைம் சிறப்பு போனஸை வழங்குவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் சுமார் ஒரு லட்சத்து 59 ஆயிரம் ஊழியர்களுக்கு பிப்ரவரி மாதத்திற்குள் போனஸ் வழங்கப்பட உள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஊழியர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கொரோனா காலத்தில் அர்ப்பணிப்பு உணர்வுடனும், ஆர்வமுடனும் ஊழியர்கள் பணியாற்றினார். அதன் பலனாகவே 10 பில்லியன் அமெரிக்க டாலர் வருவாய் இலக்கை எட்டியுள்ளோம். இந்நேரத்தில் ஊழியர்களுக்கும் அவர்களது குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம் எனக் கூறியுள்ளது.

Categories

Tech |