நடிகை சினேகாவுடன் நடிகர் தனுஷின் அக்கா எடுத்துக்கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .
தமிழ் திரையுலகில் பிரபல நடிகை சினேகா ஏராளமான திரைப்படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர்களை உருவாக்கியவர் . இவர் தெலுங்கு மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் ‘வேலைக்காரன்’ படத்தில் நடிகை சினேகாவின் நடிப்பு அதிகம் பாராட்டப்பட்டது . மேலும் கடைசியாக இவர் நடிகர் தனுஷுடன் இணைந்து பட்டாஸ் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகை சினேகா- பிரசன்னா இருவரும் தங்களது மகளின் முதல் பிறந்தநாளை பிரம்மாண்டமாக கொண்டாடியிருந்தனர் . தற்போது அந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் நடிகை சினேகாவுடன் தனுஷின் அக்காவும் அவரது கணவரும் கலந்து கொண்ட புகைப்படம் வெளியாகியுள்ளது .