குடிபோதையில் தனது இரண்டு வயது மகளை கழுத்தை நெரித்து கொலை செய்த தாயை போலீசார் கைது செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்திலுள்ள ரெங்காரெட்டி செவெல்லாவில் உள்ள ரமணகுடா வசித்து வருபவர் பரமேஸ்வரிக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளன. கணவர் இசைத் துறையில் வேலை பார்த்து வருகிறார். பரமேஸ்வரி கடந்த சில ஆண்டுகளாக குடிப்பழக்கத்திற்கு அடிமையாகி விட்டார். கடந்த செவ்வாய்க்கிழமை ஊர் சுற்றிவிட்டு குடித்துவிட்டு வீட்டுக்கு வந்த பரமேஸ்வரி அவரது மாமனார் உடன் சண்டை போட்டுள்ளார். கணவர் வெளியே வேலை தொடர்பாக சென்று இருந்தார்.
அப்போது மாமனாருக்கும் பரமேஸ்வரி இருக்கும் சண்டை ஏற்படவே மாமனார் குடித்துவிட்டு குழந்தைகளை கவனிப்பது இல்லை, பொறுப்பில்லாமல் சுற்றுகிறாய் என கண்டித்துள்ளார். இதனால் எழுந்த சண்டையில் தனது இரண்டு வயது குழந்தையை கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளார். கொல்லப்பட்ட குழந்தையின் உடல் செவல்லா அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மேலும் பரமேஸ்வரியே போலீசார் கைது செய்தனர்.