திருச்சியில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட நபர் ஒருவர் நீதிபதி இடமே சவால் விடும்படி பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
திருச்சி காந்தி மார்க்கெட் அருகே, பஜார் பகுதியில் ஓய்வுபெற்ற பேராசிரியர் ஒருவரின் வீட்டில் நுழைந்த மர்ம நபர் வீட்டில் இருந்த தங்க நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துள்ளனர். பேராசிரியரின் தாயை கத்தியால் குத்திவிட்டு அந்த வீட்டில் வேலை செய்து வந்த 30 வயது மதிக்கத்தக்க பெண்ணை மிரட்டி ஆபாச வீடியோ எடுத்து, பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளார் .அங்கிருந்து தப்பி ஓடிய பெண் கூச்சலிட்டதால் அக்கம்பக்கத்தினர் வந்து அந்த இளைஞனை பிடித்தனர்.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து அந்த மர்ம நபரை கைது செய்தனர் . அந்த மர்மநபர் டேவிட் என்பது தெரியவந்தது. போதை பழக்கம் அதிகம் உள்ள டேவிட் கொள்ளை, பாலியல் குற்றங்களில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது’ நான் செய்தது தப்புதான் ,ஆனால் அவரால் என்ன செய்துவிட முடியும் ‘என்று நீதிபதிக்கு சவால் விடும் விதத்தில் பேசியுள்ளார். மேலும் தகாத வார்த்தைகளில் திட்டி தொடங்கியுள்ளார். இந்த வீடியோ பதிவு வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.