நண்டு ரசம் செய்ய தேவையான பொருட்கள்:
நண்டு – 10
புளி – எலுமிச்சை அளவு
பூண்டு – 1
ரசப் பொடி – 3 தேக்கரண்டி
தக்காளி – 1 பெரியது
மிளகுத் தூள் – 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
மிளகாய்த் தூள் – 1 தேக்கரண்டி
தனியாத் தூள் – 1/2 தேக்கரண்டி
காய்ந்த மிளகாய் – 5
கொத்தமல்லி தழை – தேவையான அளவு
கறிவேப்பிலை – தேவையான அளவு
கடுகு, எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை:
முதலில் ஒரு பாத்திரத்தில் நண்டுகளை எடுத்து தண்ணீரால் சுத்தம் செய்தபின், அம்மிலோ அல்லது மத்து வைத்தோ நண்டுகளின் மேல் உள்ள ஓடுகள் உடைபடும் அளவிற்கு மட்டும் தட்டியபின் அதிலுள்ள ஓடுகளை மட்டும் நிக்கியபின் அதன் சதை பகுதியை மட்டும் வடிகட்டி எடுத்து கொள்ளவும்.
பின்பு தக்காளி, கொத்தமல்லி தழைகளை எடுத்து சிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். மேலும் பூண்டையும் லேசாக சிறிய குளவில் போட்டு, மையாக தட்டி எடுத்து கொள்ளவும். பிறகு புளியை ஒரு பாத்திரத்தில் எடுத்துதேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்கு கரைத்து கொள்ளவும்.
பின்னர் கரைத்து வைத்த புளிக் கரைசலில், ரசப்பொடி, உப்பு, மஞ்சள் பொடி, தட்டி வைத்திருக்கும் தசை நண்டைகளை போட்டு நன்கு கலக்கி கொள்ளவும்.
அதன் பின்பு அடுப்பில் அகலமான வாணலியை வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், அதில் கடுகைப் போட்டு தாளித்ததும், அதனுடன் காய்ந்த மிளகாய், தட்டிய பூண்டு, நறுக்கிய தக்காளி, மிளகாய்த் தூள், தனியாத் தூள், மிளகுத் தூள் போட்டு நன்கு வதக்கி கொள்ளவும்.
இறுதியில், வதக்கிய கலவையுடன், கரைத்த புளிக்கரைசலை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து, அதன் பச்சை வாசனைப் போனபின், அதனுடன் நறுக்கிய கொத்தமல்லி தழை , கறிவேப்பிலையை போட்டு இறக்கி வைத்து பரிமாறினால் ருசியான நண்டு ரசம் ரெடி. சாதத்துடன் சாப்பிட அருமையாக இருக்கும்.