பனிவரகு கஞ்சி செய்ய தேவையான பொருட்கள்:
பனிவரகு அரிசி – ஒரு கப்
கேரட் – 2
மிளகு – 1 டீஸ்பூன்
தேங்காய் – அரை முறி
எண்ணெய் – சிறிதளவு
உப்பு – தேவைக்கேற்ப
தாளிக்க:
கடுகு, சீரகம் – அரை டீஸ்பூன்
பூண்டுப் பல் – 2
பச்சை மிளகாய் – 1
பெருங்காயத்தூள் – ஒரு டீஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது
செய்முறை:
முதலில் பனிவரகு அரிசியை ஒரு பாத்திரத்தில் எடுத்து,மூழ்கும் வரை தண்ணீர் ஊற்றி 2 மணி நேரம் நன்கு ஊறவைத்து கொள்ளவும். பின்பு கேரட்டையும், தேங்காயையும் சிறு துண்டுகளாக நறுக்கியும், பச்சை மிளகாயை பாதியாக கீறி எடுத்து கொள்ளவும். பின்பு மிளகை எடுத்து நன்கு நுணுக்கி பாதியாக உடைத்து கொள்ளவும்.
அடுப்பில் குக்கரை வைத்து, சிறிதளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் கடுகு, சீரகம் போட்டு தாளித்ததும், அதனுடன் பூண்டு பற்கள், நறுக்கிய பச்சை மிளகாய், சிறிதளவு பெருங்காயத்தூள், கறிவேப்பிலையை போட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கியபின், அதனுடன் நறுக்கிய கேரட் துண்டுகளை சேர்த்து வதக்கி கொள்ளவும்.
பிறகு கேரட் நன்கு வதங்கியபின், அதில் கேரட் வேகும் அளவுக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றியபின், ருசிக்கேற்ப உப்பு போட்டு, கரண்டியால் கிளறி விட்டு நன்கு கொதிக்க விடவும்.
மேலும் கேரட் கலவையானது ஒரு கொதி வந்தபின், அதனுடன் உற வைத்த பனிவரகு அரிசியை போட்டு, 3 விசில் வரும் வரை நன்கு வேகவைத்து இறக்கி வைக்கவும்.
இறுதியில் இறக்கி வைத்த கலவையில் மிளகுத்தூள் தூவி, நறுக்கி வைத்த தேங்காய்ப் பற்களை போட்டு அலங்கரித்து பரிமாறினால் ருசியான பனிவரகு கஞ்சி தயார். மேலும் இதனுடன் சுட்ட அப்பளத்துடன் சாப்பிட ருசியாக இருக்கும்.