Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

மலச்சிக்கலை குறைக்கணுமா ? சாதத்துக்கு ஏற்ற இந்த ரெசிபிய செய்து அசத்துங்க..!!

சிறுகிழங்கு பொரியல் செய்ய தேவையான பொருள்கள்:

சிறுகிழங்கு                 – 300 கிராம்
மிளகாய் தூள்             – 1 மேஜைக்கரண்டி
மஞ்சள் தூள்                – 1/2 தேக்கரண்டி
தேங்காய் துருவல்   – 2 மேஜைக்கரண்டி
உப்பு                                 – தேவையான அளவு

தாளிக்க:

எண்ணெய்                    – 4 மேஜைக்கரண்டி
கடுகு                                – 1/2 தேக்கரண்டி
உளுந்தம்பருப்பு         – 1/2 தேக்கரண்டி
பெரிய வெங்காயம்  – 1
கறிவேப்பிலை           – சிறிது

செய்முறை:

முதலில் சிறுகிழங்கை எடுத்து தோல் நீக்கியபின், சிறு துண்டுகளாக வெட்டி எடுத்து  கொள்ளவும். பின்பு வெங்காயத்தை எடுத்து தோல் நீக்கியபின், சிறு துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு தேங்காயை பூவாக துறுவி கொள்ளவும்.

மேலும் அடுப்பில் அகலமான வாணலியை வைத்து, அதில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கொதித்ததும், அதனுடன் கடுகு, உளுந்தம் பருப்பு போட்டு தாளித்ததும், அதில் கறிவேப்பிலை, நறுக்கிய வெங்காயம் சேர்த்து நன்கு  வதக்கவும்.

பின்னர் வதக்கிய வெங்காயமானது நன்கு பொன்னிறமானதும், நறுக்கி வைத்த சிறுகிழங்கு துண்டுகளை போட்டு கரண்டியால் நன்கு கிளறி விட்டபின் நன்கு வேக வைத்து, அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், ருசிக்கேற்ப  உப்பு தூவி நன்கு கிளறி விட்டு பச்சை வாசனை போகும் வரை நன்கு வதக்கவும்.

கடைசியாக வதக்கிய கலவையுடன், துருவிய தேங்காய் துருவலை சேர்த்து, நன்கு கரண்டியால் கிளறிவிட்டபின், நிறம் மாறியபின் இறக்கி வைத்து சாதத்துடன் பரிமாறினால், சுவையான சிறுகிழங்கு பொரியல் ரெடி.

Categories

Tech |