Categories
சமையல் குறிப்புகள் லைப் ஸ்டைல்

வேக வைத்த முட்டையை சாப்பிட பிடிக்கலையா ?அப்போ இந்த ரெசிபிய ட்ரை பண்ணி… குழந்தைகளுக்கு கொடுத்து அசத்துங்க..!!

 டீப் ஃபிரை எக் செய்ய தேவையான பொருட்கள்:

முட்டை             – 5
சோள மாவு      – 2 ஸ்பூன்
பிரட் தூள்          – அரை கப்
துருவிய சீஸ்  – அரை கப்
எண்ணெய்        – தேவையான அளவு
மிளகு தூள்       – அரை தேக்கரண்டி
உப்பு                     – சிறிதளவு

செய்முறை :

முதலில் அடுப்பில் கடாயை வைத்து அதில் 4 முட்டைகளை மட்டும் போட்டு, தண்ணீர் ஊற்றி லேசாக வேகும் வரை கொதிக்க வைத்து, வெந்ததும் இறக்கி ஆற வைத்து, முட்டையில் உள்ள ஓட்டை மட்டும் நிக்கி கொள்ளவும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் ஒரு முட்டையை மட்டும் உடைத்து ஊற்றி கரண்டியால் நன்கு அடித்து கொள்ளவும்.  அதன் பின்பு அகலமான முடியில் சீஸை எடுத்து நன்கு துருவி எடுத்து கொள்ளவும்.

பின்பு மற்றோரு பாத்திரத்தில் சோள மாவு, ருசிக்கேற்ப உப்பு தூவி, மிளகு தூள் போட்டு நன்கு கலந்து வைக்கவும். பிறகு மற்றோரு பவுலில் துருவி வைத்த சீஸ் துண்டுகள், பிரட் தூளை போட்டு நன்கு கலந்து வைக்கவும்.

மேலும் அடுப்பில்அகலமான வாணலியை வைத்து, அதில் பொறிக்க தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்கு கொதிக்க வைத்ததும், லேசாக வேக வைத்த முட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து, அதை கலந்து வைத்த சோள மாவில் நன்கு பிரட்டியபின், கலந்து அடித்த முட்டை கலவையில் நனைத்து கொள்ளவும்.

இறுதியில் முட்டை கலவையில் நனைத்த முட்டைகளை எடுத்து, கலந்து வைத்த சீஸ் கலவையில் எல்லா இடத்திலும் படும்படி நன்கு பிரட்டியபின், கொதிக்கின்ற எண்ணெயில் போட்டு பொன்னிறமாக வரும் வரை நன்கு வேக வைத்து, பொரித்து எடுத்தால் அருமையான ருசியில் மொறுமொறுப்பான ருசியில் டீப் ஃபிரை எக் தயார்.

Categories

Tech |