Categories
தேசிய செய்திகள்

நாங்க ரெடி..! எப்போ பேசலாம் சொல்லுங்க ? என்னை நம்புங்க…. விவசாயிகளுக்கு உறுதி அளித்த மோடி …!!

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி போராட்டங்களில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தத் தயாராக இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்திருக்கிறார்.

குடியரசு தலைவர் உரை மீதான விவாதத்தில் பங்கேற்ற உறுப்பினர்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோடி, மாநிலங்களவையில் உரையாற்றினார். வேளாண் சட்டங்களை எதிர் போரின் வாதங்களில் எந்த சாரமும் இல்லை என்று அப்போது அவர் குறிப்பிட்டார். விவசாயிகளிடம் பேச எப்போதுமே பேச தயாராக இருப்பதாக கூறிய பிரதமர், எல்லா பிரச்சனைகளுக்கும் கூட்டாக விவாதித்து தீர்வு காண வேண்டும் என்றார்.

மேலும், விவசாயிகளிடம் வேளாண் அமைச்சர் தொடர்ந்து பேசி வருகின்றார். இதுவரை இரு தரப்பிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இரு தரப்பிலும் அவரவர் கொடுத்தேன் கோரிக்கைகளை மற்றவருக்கு புரிய வைக்க முயற்சித்து வருகின்றோம். போராட்டங்கள் நடத்த உங்களுக்கு உரிமை உள்ளது. ஆனால் இத்தனை பேர் அங்கு கூடியிருப்பது நல்லதல்ல. கலைந்து செல்லுங்கள். பேச்சுவார்த்தைக்கான அனைத்து கதவுகளும் திறந்தே உள்ளன என்பதை நான் இந்த அவையிலே உறுதி தருகின்றேன்.

குடியரசுத் தலைவரின் உரையை கேட்காமலேயே எதிர்க்கட்சிகள் அது பற்றி விமர்சனம் செய்வதாக பிரதமர் மோடி கூறினார். கொரோனா எதிர்ப்பு நடவடிக்கைகளில் இந்தியா முன்னெடுத்துள்ள தீர்வுகளை உலகமே கவனித்து வருவதாகவும் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி காங்கிரஸ், திமுக கட்சிகளின் எம்பிக்கள் மாநிலங்களவை நடவடிக்கைகளை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.

Categories

Tech |