நாகலாந்து மாநிலத்தில் ஒரு வீட்டை அலேக்காக தூக்கி இடம்பெயர்ந்த சம்பவம் பெரும் வைரலாகி வருகிறது.
ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு புலம்பெயரும் போது வீட்டில் உள்ள பொருட்களை எல்லாம் எடுத்துச் செல்வது வழக்கம். ஆனால் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் யாச்சோம் கிராமத்தில் ஒரு வீட்டையே அலேக்காகத் தூக்கிக்கொண்டு இடம் மாறிய சம்பவம் நிகழ்ந்துள்ளது. நாகலாந்தில் லாங் லைன் மாவட்டத்திலுள்ள யாசின் கிராமத்தில் அமைந்துள்ள அந்த கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட அந்த வீட்டை அலேக்காகத் தூக்கிக்கொண்டு வேறு ஒரு இடத்திற்கு இடம் மாற்றினார்.
இது குறித்த வீடியோவை வனத் துறை அதிகாரியான சுதா ராம் என்பவர் ட்விட்டரில் வெள்ளிக்கிழமை அன்று பகிர்ந்துள்ளார். இதையடுத்து அந்த வீடியோ வைரலாகி வருகிறது.