Categories
லைப் ஸ்டைல்

பீட்ரூட் சாப்பிட்டா இவ்வளவு நன்மையா?… புற்றுநோயையே தடுக்கும் அருமருந்து…!!!

புற்று நோய்க்கு அருமருந்தாக அமையும் பீட்ரூட் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

நம் அன்றாட வாழ்வில் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளை உடலுக்கு ஆரோக்கியம் தரும் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். அதன்படி பீட்ரூட் உடலுக்கு அதிக சத்துக்களைத் தருகிறது. இது ஒரு சிறந்த உணவு ஆகும். இதில் கால்சியம், இரும்பு, விட்டமின் ஏ, விட்டமின் சி, போலிக் அமிலம், மாங்கனிசு, பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளது.

இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது. நார்ச்சத்து நிரம்பியது. ஜீரண சக்தியை எளிதாகிறது. வெள்ளை அணுக்களை அதிகரிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதில் உள்ள பீட்டா சயலின் சத்து சில வகை புற்றுநோய்களைத் தடுக்கிறது. இதில் நிறைந்துள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் நோய்களை தடுக்கின்றன.

Categories

Tech |