Categories
சென்னை மாவட்ட செய்திகள்

குளத்தில் குளியல்…. தண்ணீரில் மூழ்கிய சகோதரர்கள்…. கதறும் பெற்றோர்….!!

குளத்தில் குளிக்க சென்ற சகோதரர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை மாவட்டத்திலுள்ள ஆதம்பாக்கம் காந்திநகர் பகுதியைச் சார்ந்தவர் ராஜன். இவர் பெயிண்டிங் தொழில் செய்து வருகிறார். இவருக்கு விஷால் மற்றும் வினோத்குமார் என இரண்டு மகன்கள் இருந்தனர். இவர்கள் ஆதம்பாக்கத்தில் உள்ள ஒரு பள்ளியில் 7, 9 ஆம் வகுப்பு படித்து வருகின்றனர். இவர்கள் நேற்று முன்தினம் புழுதிவாக்கத்திலுள்ள அன்னை தெரசா நகரில் இருக்கும் ஒரு குளத்தில் குளிக்க சென்றுள்ளனர். இவர்கள் இருவரும் குளத்தில் குளித்து கொண்டிருக்கும் போது திடீரென விஷால் ஆழமான பகுதிக்கு சென்று நீரில் தத்தளித்துள்ளான்.

இதனை கண்ட வினோத்குமார் தம்பியை காப்பாற்றுவதற்காக சென்றபோது இருவரும் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து அக்கம்பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் மடிப்பாக்கம் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறுவர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Categories

Tech |