வாலிபரின் தலையை அறுத்து கொலை செய்துவிட்டு சகோதரர்கள் இருவர் காவல் நிலையத்தில் சரணடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள தாழையூத்து பகுதியிலிருக்கும் புலித்தேவர் நகரைச் சார்ந்தவர் சிதம்பர செல்வம். இவர் கூலி வேலை செய்து வந்தார். சிதம்பர செல்வம் அவரது உறவினரான பாலாஜி மற்றும் அவரது தம்பி ராமையா அனைவரும் ஒன்றாக மது அருந்துவது உண்டு. அவ்வாறு மது அருந்திக்கொண்டிருக்கும் போது பாலாஜியின் மனைவியை சிதம்பரம் செல்வம் தவறாக பேசியதுதால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனை அடுத்து நேற்று காலை சிதம்பர செல்வம், பாலாஜி அவரது தம்பியான ராமையா மற்றும் பாலாஜி நண்பர்கள் என ஆறு பேரும் அருகில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் பாலாஜி தனது மனைவியை எப்படி தவறாக பேசலாம் என்றுகூறி சிதம்பர செல்வத்தின் கழுத்தில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் அவரது தலை துண்டானதால் தலையை எடுத்துக் கொண்டு பாலாஜி மற்றும் அவரது தம்பியான ராமையா இருவரும் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளனர்.
இதனையடுத்து சம்பவம் நடந்த இடத்திற்கு காவல்துறையினர் விரைந்து சென்று சிதம்பர செல்வத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் நடந்தபோது பாலாஜியுடன் இருந்த மூவரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.