நாம் தினமும் சாப்பிடும் உணவுகளில் எந்த உணவுகளை தவிர்க்க வேண்டும் நிறைய சாப்பிட வேண்டும் என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
நம் அன்றாட வாழ்வின் உணவு என்பது மிகவும் இன்றியமையாதது. அவ்வாறு நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் அதிக அளவு சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகம் எடுத்துக்கொள்ளவேண்டும். அதிலும் குறிப்பாக காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகளில் அதிக சத்துக்கள் நிறைந்துள்ளது. அதன்படி நாம் தினமும் எடுத்துக்கொள்ளும் உணவுகளில் எதை சாப்பிடலாம் எதை தவிர்க்கலாம் என்பது பற்றி பார்க்கலாம் வாருங்கள்.
ஒரு நல்ல தூக்கத்துக்கு வாழைப்பழம், பெர்ரி பழங்கள், பாதாம் சாப்பிடலாம். அதன்படி ஆரோக்கியமான மூளைக்கு ஓட்ஸ், மீன், பருப்புகள், பயிர்கள், நிலக்கடலை, இலைகள் கொண்ட காய்கறிகள், வால்நட் பருப்பு இவற்றை சாப்பிடலாம். வலுவான பற்களுக்கு ஆப்பிள், கேரட், பால் பொருட்கள், கிவி பழம் மற்றும் வெங்காயம் ஆகியவற்றை சாப்பிடலாம்.
இவற்றைத் தவிர தினமும் தவிர்க்க வேண்டிய உணவுகள் பாஸ்ட் புட் உணவுகள், காபி, இனிப்பு குளிர்பானங்கள், பீட்சா, ரெட் மீட், இனிப்பு மிகுந்தவை ஆகியவற்றை தவிர்ப்பது மிகவும் நல்லது.