Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

BREAKING: நெஞ்சை பதற வைக்கும் சம்பவம்… OMG… 5 பேர் பலி…!!!

மதுராந்தகம் அருகே கார் மற்றும் லாரி மோதி கொண்ட கோர விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே அத்திமணம் என்ற இடத்தில் சற்றுமுன் அதிவேகமாக வந்த கார், லாரியின் பின் பக்கமாக மோதி பெரும் விபத்து ஏற்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலையில் நேரிட்ட இந்த விபத்தில் மூன்று பெண்கள் மற்றும் இரண்டு ஆண்கள் உட்பட 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதுபற்றி தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸார் உயிரிழந்தவர்களின் உடல்களை கைப்பற்றினர். பூவிருந்தவல்லி பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் தனது குடும்பத்துடன் மேல் மருவத்தூர் கோயிலுக்கு சென்றுள்ளார். கோவிலுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் போது இந்த கோர விபத்து நிகழ்ந்துள்ளது. இதில் 5 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |