கடந்த வருடம் மார்ச் மாதம் கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனால் ஆரம்பத்தில் பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி இருந்தது. ஆனால் ஜூன், ஜூலை மாதங்களில் விலை படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. இந்நிலையில் சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து லிட்டருக்கு 31 காசுகள் உயர்ந்து ரூ.89.70ஆக விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு அதிரடியாக நிகழ்ந்த விலை அதிகரிப்பால் வாகன ஓட்டிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிட்டது.
இந்த விலையேற்றத்தின் காரணமாக தற்போது ஒரு திருட்டு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது. அதில் இளைஞர் ஒருவர் பெட்ரோல் பங்கில் பைக்கிற்கு பெட்ரோல் போட வருகிறார். இதையடுத்து பெட்ரோலை நிரப்பிவிட்டு தான் பைக்கில் மானிட்டரை சரி செய்வதாக கூறி ஸ்டார்ட் செய்து பணத்தை கொடுக்காமல் அங்கிருந்து தப்பித்து சென்று விடுகிறார். இதற்கு காரணம் பெட்ரோல் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் கொடுக்க பணமில்லாமல் இதுபோன்ற திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.
இதேபோன்று பெட்ரோல் விலை உயர்ந்ததையடுத்து நாட்டின் பல இடங்களில் திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனவே விலை உயர்வின் காரணமாக மக்கள் இதுபோன்று அதிகமான திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவது வேதனையளிக்க கூடிய ஒன்றாக இருக்கிறது.
https://youtu.be/HFR9bMMiJd0