Categories
மாநில செய்திகள்

மக்களே! “கொரோனா தடுப்பூசி” இந்த தப்ப மட்டும் பண்ணாதீங்க…… போலீஸ் கமிஷனர் அறிவுரை….!!

கொரோனா தடுப்பூசி குறித்த தவறான வதந்திகளை மக்கள் நம்ப வேண்டாம் என்று திருச்சி மாநகர காவல் ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடு முழுவதும் கொரோனா பரவல் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது. இதையடுத்து கொரோனாவை தடுப்பதற்காக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் முன்கள் பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதையடுத்து திருச்சி அண்ணல் காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையில் திருச்சி மாநகர காவல் ஆணையர் லோகநாதன் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளார். இதன் பின்னர் பேசிய அவர், “இன்று முதல் திருச்சி மாநகர காவலர்கள் 1184 பேருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. மேலும் துப்புரவு பணியாளர்கள் மருத்துவர்கள் என மொத்தம் 3 ஆயிரத்து 446 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

எனவே மக்கள் இது குறித்து சமூக வலைதளங்களில் பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் இதுபோன்று தடுப்பூசி போட்டுக் கொள்வதால் உயிரிழப்பு போன்ற பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று சமூக வலைதளங்களில் வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் உயிரிழப்பு குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை, அறிவியல் பூர்வமாகவும் நிரூபிக்கப்படவில்லை. இதனால் மக்கள் தடுப்பூசி குறித்து வதந்திகளை நம்புவது மட்டுமல்லாமல், அதை பகிர்கின்றனர். எனவே அதிகாரபூர்வமாக தகவல் குறித்து அறியாமல் வதந்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |