Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

நீ ஏன் எங்க ஊருக்கு வந்த…? கேலி செய்ததால் வந்த வினை… தொழிலாளிக்கு நேர்ந்த கொடூர சம்பவம்…!!

மதுபோதையில் கேலி செய்ததால் கூலித் தொழிலாளி குத்திக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகர் மாவட்டத்திலுள்ள கொல்லூர் பட்டி பகுதியில் சிவலிங்கம் என்ற தொழிலாளி வசித்து வருகிறார். இவரது பக்கத்து வீட்டில் வெம்பக்கோட்டை பகுதியை சேர்ந்த வெள்ளைச்சாமி என்பவர் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கூலி தொழிலாளியான வெள்ளைச்சாமி கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்லூர் பட்டியில் வீடு எடுத்து தங்கி வந்ததால் சிவலிங்கம் அவரை அடிக்கடி கேலி செய்துள்ளார். இந்நிலையில் இருவரும் மது குடித்து விட்டு பேசிக் கொண்டிருந்த போது, சிவலிங்கம் வெள்ளைச்சாமி இடம் வெளியூர்க்காரன் இங்கு வந்து பிழைப்பு நடத்துவது ஏன் என்று கேட்டுள்ளார்.

இதனால் கோபமடைந்த வெள்ளைச்சாமி தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சிவலிங்கத்தை சரமாரியாக குத்தி விட்டார். இதில் படுகாயமடைந்த சிவலிங்கம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து உடனடியாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சிவலிங்கத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவலிங்கத்தை குத்தி கொலை செய்த குற்றவாளியான வெள்ளைசாமி கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |