உங்கள் கனவில் தண்ணீர் வந்தால் என்ன பலன் என்று இப்போது தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.
நாம் கானும் ஒவ்வொரு கனவிற்கு பின்னும் ஒவ்வொரு காரணங்கள் உண்டு. இவை மனோதத்துவ ரீதியில் நிறுபிக்கப்பட்டவையும் கூட. சில நேரங்களில் நம்முடைய கனவானது நமது எதிர்காலத்தை அறிவுறுத்துகிறது என்றும் கூறலாம். அந்த வகையில் உங்கள் கனவில் தண்ணீர் வந்தால் என்ன பலன் எனப் பார்க்கலாம்.
உங்கள் கனவில் வெள்ளம் பெருக்கெடுத்து வருவது போல கனவு கண்டால் அது உங்கள் வாழ்க்கையில் பதட்டமும், பிரச்சினைகளும் ஏற்பட போவதன் அறிகுறி ஆகும். அதுவே வெள்ளம் குறைவது போல கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் புதிய மாற்றங்களும், சிந்தனைகளும் வரப்போகிறது என்று அர்த்தம். தண்ணீர் கொட்டுவது போல நீங்கள் கனவு கண்டால் உங்களுக்கு அதிக பணவரவு உண்டாகும். மரங்கள் மற்றும் செடிகளுக்கு நீங்கள் தண்ணீர் விடுவது போல கனவு கண்டால் உங்களுக்கு நன்மை செய்ய பலரும் தேடி வருவார்கள் என அர்த்தம்.
நீங்கள் நீரில் மூழ்குவது போல கனவு கண்டால் உங்களுடைய பிள்ளைகளால் உங்களுக்கு சந்தோசம் கிடைக்கும். தண்ணீர் மிதமான வேகத்தில் பாய்வது போல கனவு வந்தால் உங்கள் வாழ்க்கையில் இருக்கும் பிரச்சினைகள் தீரும், அதுவே அதிவேகமாக நிரம்பி வழிவது போல கனவு வந்தால் அது நீங்கள் உங்கள் மனதில் தேக்கி வைத்திருக்கும் உணர்ச்சிகளை வெளிப்படுத்த வேண்டும் என்பதற்கான அறிகுறி ஆகும்.