Categories
மாவட்ட செய்திகள்

மக்களே உஷார்… சந்தைகளில் ரப்பர் அரிசி விற்பனை… இனிமே பார்த்து வாங்குங்க…!!!

 விருதுநகர் மாவட்டத்தில் உள்ள சந்தைகளில் ரப்பர் அரிசி விற்பனை செய்யப்பட்டு வருவது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகரில் சாலையில் தனியார் பார் ஒன்று வைத்திருந்தவர் பிச்சைமணி இவர் அங்கு வேலை செய்யும் ஊழியர்களுக்கு அங்கேயே உணவு சமைத்து கொடுத்து வந்துள்ளார். அப்போது ஒருவர் வயிற்று வலியும் வயிற்றுப் போக்காள்  பாதிக்கப்பட்டது தெரியவந்தது .

அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பார்த்தார் அப்பொழுதும் சரியாகவில்லை பிறகு அவர் உண்ணும் உணவை மருத்துவர் சோதனையிட்டதில் அவர் உண்ணும் உணவு அரிசியை வேக வைக்க ஒரு மணி நேரம் ஆகிறது என்றும் அரிசி பிசைந்து கீழே போட்டால் அரிசி உதிரவில்லை என்றும் கூறினார். எனவே சந்தேகம் கொண்ட மருத்துவர் பிச்சைமணியிடம் கூறினார். உடனே அவர் மக்கள் நீதி மைய மத்திய மாவட்ட செயலாளர் காளிதாஸ்யிடம்  கூறினார். அரிசியை ஆய்வு செய்தபோது அது ரப்பர் அரிசி என்பது தெரியவந்தது.

சில நாட்களுக்கு முன்பு சீனாவில் ரப்பர் அரிசி உருவாக்கப்பட்டது  தெரியவந்தது அதுபோல் விருது நகரிலும் இருப்பது சந்தேகத்திற்குரியது என்று  காளிதாசர் கூறினார். எனவே ரப்பர் அரிசி பயன்பாட்டில் இருக்கிறதா மற்றும் மக்கள் அதனை பயன்படுத்துகிறார்களா என்று ஆய்வு செய்ய உத்தரவிட்டார்.

Categories

Tech |