Categories
மாநில செய்திகள்

24 மணி நேர கார் பயணம்…. பொறுமையாக ஓட்டி வந்த ஓட்டுனர்… வெளியான ஆச்சரிய தகவல்…!

தமிழகம் வந்த சசிகலாவை நேற்று ஒரு நாள் முழுவதும் தொண்டர்களை சந்திப்பதற்காக பொறுமையாக கார் ஓட்டிச் சென்ற நபர் குறித்த தகவல்கள் தெரியவந்துள்ளது.

சொத்துக்குவிப்பு வழக்கில் கடந்த 4 ஆண்டுகளாக சிறையில் இருந்த சசிகலா விடுதலையான நிலையில் நேற்று தமிழகம் வந்தார். அவருக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதனால் சசிகலா இரவும் தனது பயணத்தை தொடர்ந்தார். 24 மணி நேரம் கார் பயணத்திற்குப் பெண் சென்னை ராமாபுரம் வந்தடைந்தார்.

அங்கு எம்ஜிஆர் வாழ்ந்த வீட்டிற்கு சென்று அவரது திருவுருவ சிலைக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். அதன்பின் அவர் வீடு திரும்பினார். ஒரு நாள் முழுவதும் சசிகலா தொண்டர்கள் கூட்டத்துக்கு இடையே நெடும் பயணம் செய்ததற்கு பின்னால் அவரின் ஓட்டுநரின் உழைப்பு அதிக அளவு இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

சசிகலா வந்த காரை ஓட்டிவந்தவரின் பெயர் பிரபு ஆகும். இவர் மறைந்த தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், சசிகலாவின் உயிர் தோழிமான ஜெயலலிதாவிடம் 25 ஆண்டுகளாக கார் ஓட்டுனராக பணிபுரிந்தவர். நேற்று ஒரு நாள் முழுவதும் சசிகலா தொண்டர்களை சந்தித்ததற்கு காரை ஓட்டிச்சென்ற பிரபுவிற்கு பெருமளவு பங்கு உண்டு என்பது தெரியவந்துள்ளது.

Categories

Tech |