பேருந்து சக்கரத்தில் சிக்கி மோட்டார் சைக்கிளில் சென்றவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டத்திலுள்ள போடி நாயக்கனூர் பகுதியில் ஈஸ்வரன் என்பவர் வசித்துவருகிறார். இவர் கடந்த 15 வருடங்களாக தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள வீரபாண்டி பலகாரத் தட்டம் சுப்பிரமணி காம்பவுண்டில் வசித்து வருகிறார். இவர் பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து விட்டு பல்லடம் சாலை வழியாக மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது திருப்பூர்-பல்லடம் சாலை வித்யாலயா பேருந்து நிலையம் அருகில் இவரது மோட்டார் சைக்கிளில் வந்த போது, திருப்பூரில் இருந்து பல்லடம் நோக்கி சென்ற தனியார் பேருந்து இவரின் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.
இதில் கீழே விழுந்த ஈஸ்வரன் பேருந்து சக்கரத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதுகுறித்து தகவலறிந்த வீரபாண்டி போலீசார் அங்கு விரைந்து சென்று அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த வீரபாண்டி போலீசார் அந்த தனியார் பேருந்தை ஓட்டி சென்ற நாதன் பாளையம் பகுதியில் வசித்து வரும் சுப்பிரமணி என்பவரை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.