Categories
லைப் ஸ்டைல்

இளநரையை விரட்டணுமா…? இந்த உணவுகளை…. கட்டாயம் எடுத்துக்கோங்க…!!

இளநரையை முன்கூட்டியே தடுக்கக்கூடிய உணவுகள் என்னவென்று இப்போது பார்க்கலாம்.

நமக்கு வயதான பிறகும் கூட நம்முடைய முடியில் நரை என்பது ஏற்றுக் கொள்ள முடியாதஒன்றாக இருக்கும். ஆனால் இளம் வயது, நடுத்தர வயதில் நரை என்பது நிச்சயம் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இது மன அழுத்தத்தை அதிகரிக்கச் செய்வதுடன், தாழ்வு மனப்பான்மையும் உண்டாக்கும். ஒரு சில வகை உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நரை  வருவதை தள்ளி போட முடியும். நரை வருவதை யாராலும் முழுமையாக தடுக்க முடியாது. ஆனால் விரைவில் வருவதை தடுக்க முடியும். இதற்கு எந்த மாதிரியான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது பார்க்கலாம்.

பச்சை இலை காய்கறிகள்:

இவை உங்கள் உணவில் இடம் பெற வேண்டியது அவசியம். மேலும் இந்த இலை கீரைகள் மற்றும் காய்கறிகளில் போலிக் அமிலம் இருப்பதால் உடலுக்கு நன்மை செய்யும். கூந்தலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கும். முடி உற்பத்திக்கு முக்கியமான ஊட்டச்சத்து செலினியம் மற்றும் விட்டமின் டி போன்றவற்றையும் கொண்டுள்ளது. எனவே இவை வயதான விளைவுகளை எதிர்த்து போராடுகிறது.

பெர்ரி பழங்கள்:

புளு பெரி பழத்தை எடுத்துக் கொள்வதன் மூலம் துத்தநாகம் தாமிரம் விட்டமின் பி காம்ப்ளக்ஸ் ஆகியவை நமக்கு கிடைத்தால் மெலனின் நிறமியை உற்பத்தி செய்ய உதவுகிறது. வெள்ளைமுடியை குறைக்கவும் இது உதவும் என்பதால் கட்டாயம் எடுத்துக் கொள்ளுங்கள்.

நட்ஸ்கள்:

இவை பல்வேறு பிரச்சினைகளை தீர்க்கும் என்று ஆய்வு ரீதியாக நிருபிக்கப்பட்டுள்ளது. இவை எல்லாவற்றையும் அளவாக எடுத்துக் கொள்வதன் மூலம் வெள்ளைமுடி ஏற்படுவதை குறிப்பிட்ட சில காலங்களுக்கு தள்ளிப்போட முடியும்.

சூரியகாந்தி விதை:

சூரியகாந்தி விதைகளில் விட்டமின் பி, காம்ப்ளக்ஸ், வைட்டமின் இ, துத்தநாகம் ஆகியவை இருப்பதால் தினமும் ஒரு டீஸ்பூன் எடுத்துக் கொண்டால் முடிக்கு நல்லது.

சால்மன் & டூனா மீன்:

இதில் ஒமேகா 3 உள்ளதால் முடி வளர்ச்சிக்கு சிறப்பாக உதவும். இந்த உணவுகள் எல்லாம் முடி வளர்ச்சிக்கு உதவும் உணவுகள் என்பதை தாண்டி இவையெல்லாம் கூந்தலில் நரை முடி முன்கூட்டியே வருவதை தடுக்கும் உணவுகள் என்பதால் தவிர்க்காமல் உங்களுடைய உணவில் சேருங்கள் நிச்சயம் பலன் கொடுக்கும்.

Categories

Tech |