Categories
திருச்சி மாவட்ட செய்திகள்

கல்யாணமாகி 10 நாள் தான் ஆகுது… சடலமாக மீட்கப்பட்ட புதுப்பெண்… திருச்சியில் பரபரப்பு…!!

திருமணமான 10 நாட்களில் புதுப்பெண் கிணற்றிலிருந்து பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தில் உள்ள முசிறி மேற்கு கிராம நிர்வாக அதிகாரி ஆனந்திற்கு முசிறி சுந்தரர் பகுதியில் உள்ள ஒரு தோட்டத்து கிணற்றில் ஒரு பெண் தற்கொலை செய்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் உடனடியாக அவர் முசிறி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விட்டனர். மேலும் இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்ட அந்த பெண் கூலி தொழிலாளியான ஜெகதீஸ்வரன் என்பவரின் மனைவி ரோஜா என்பது போலீசாருக்கு தெரிய வந்துள்ளது.

இவர்களுக்கு திருமணமாகி பத்து நாட்கள் தான் ஆகிறது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் தாமாகவே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு யாரும் அவரை கிணற்றில் தள்ளி கொலை செய்து விட்டனரா என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதோடு திருமணமாகி பத்து நாட்களளே ஆவதால் ஆர்.டி.ஓ விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

Categories

Tech |