பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்கான ரசீது இன்னும் 15 நாட்களில் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பரப்புரையில் மக்களை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு அறிவிப்புகளை அறிவித்து வருகிறார்.
இந்நிலையில் தமிழகத்தில் உலா 16.43 லட்சம் விவசாயிகளுக்கு ரூபாய் 12,110 கோடி பயிர் கடன்களை தள்ளுபடி செய்யப் படுவதாக சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். இதையடுத்து அரக்கோணத்தில் பிரச்சாரம் செய்த அவர் பயிர் கடன் தள்ளுபடி செய்யப் பட்டதற்கான ரசீது இன்னும் 15 நாட்களில் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.