Categories
தென்காசி மாவட்ட செய்திகள்

முக்கிய ஆதாரத்தையும் திருட்டிடாங்க… மர்ம நபர்களின் கைவரிசை… போலீசாரின் தேடுதல் வேட்டை…!!

தலைமை ஆசிரியர் வீட்டில் நான்கு லட்சம் மதிப்புள்ள நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தென்காசி மாவட்டத்திலுள்ள மேலகரம் ஸ்டேட் வங்கி காலனி 4 வது தெருவில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் பணம் பட்டியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் தலைமை ஆசிரியராக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவியான இவான்ஜலின் என்பவர் செங்கோட்டை அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக வேலை பார்த்து வந்துள்ளார். இந்த தம்பதிகளின் மகனும் அங்குள்ள ஒரு பள்ளியில் பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் இவான்ஜெலினுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நெல்லையில் உள்ள மருத்துவமனைக்கு சந்திரசேகரன் மற்றும் அவரது மகனும் அழைத்து சென்றுள்ளனர். அவர்கள் மூவரும் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து வீட்டிற்குள் சென்று பார்த்த போது அவர்கள் பீரோவில் வைத்திருந்த 100 கிராம் வெள்ளி பொருட்கள் மற்றும் 9 போன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக குற்றாலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தடவியல் நிபுணர்கள் அங்கு பதிவான தடயங்களை சேகரித்தனர். அந்த வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவையும் மர்ம நபர்கள் திருடி விட்டு சென்றுள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தலைமை ஆசிரியரின் வீட்டில் நான்கு லட்சம் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Categories

Tech |