பிரபல தொகுப்பாளினி ரம்யா உடல் எடையை குறைத்து வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்துள்ளனர் .
விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர் தொகுப்பாளினி ரம்யா . இவர் ஒரு சில திரைப்படங்களில் நடித்துள்ளார் . சமீபத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் படத்திலும் ரம்யா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது . மேலும் உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் உடைய ரம்யா எடை தூக்கும் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்.
இந்நிலையில் தொகுப்பாளினி ரம்யா நான்கு வாரங்களில் உடல் எடையை குறைத்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார் . இவர் நான்கு வாரங்களில் 2.5 கிலோ எடை குறைத்துள்ளதாக தனது சமூகவலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார் . தற்போது செம ஸ்லிம்மாக இருக்கும் ரம்யாவின் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது .