பிரிட்டனில் 70 வயதிற்கு மேற்பட்டோர் தடுப்பூசி போட்டுக்கொள்ள வில்லை என்றால் அவர்கள் உடனடியாக NHS-ஐ தொடர்பு கொள்ள வேண்டும் என்று சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரிட்டனில் கோரானா தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதிகம் பாதிப்படைய கூடியவர்கள், மருத்துவர்கள், சுகாதார ஊழியர்கள், அதிக வயது உடையோருக்கு தடுப்பூசி போடுவதில் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. நாட்டில் தடுப்பூசி போடுவதற்கான இலக்கை அடைவதற்கு இன்னும் நான்கு நாட்களே உள்ளன.
ஆகையால் நோயால் பாதிக்கப்பட வாய்புள்ளவர்களை பாதுகாக்கும் வரை நாங்கள் ஓய்வெடுக்க போவதே இல்லை என்று சுகாதார அமைச்சர் மாட் ஹான்காக் தெரிவித்துள்ளார். மேலும் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது, இங்கிலாந்தில் வசிக்கும் 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் இன்னும் தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்றால் NHS ஐ தொடர்பு கொள்ள வேண்டும்.
இதற்காக nhs.uk என்ற இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். அல்லது 119 என்ற எண்ணை அழைக்கலாம். இதைத் தவிர உள்ளூர் GPயையும் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார். இதன் மூலம் NHS அதிகாரிகள் நோயால் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு தங்களால் முடிந்த பாதுகாப்பு பணியினை செய்து வருகின்றனர்.