மாநிலங்களவையில் எம்.பி சீட் தருபவர்கள் கட்சியில் சேர தயார் என்று சந்தானம் நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் கட்சிகள் தங்களுடைய தேர்தல் பிரச்சாரத்தை தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. மேலும் கருணாநிதி, ஜெயலலிதா போன்ற ஆளுமை தலைவர்கள் இல்லாமல் நடக்கும் முதல் சட்டமன்ற தேர்தல் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு உள்ளது. இந்நிலையில் திரையுலகினரை சேர்ந்த சிலர் அரசியலில் இரங்கி வருகின்றனர். இதையடுத்து நடிகர் சந்தானம் பாஜகவில் சேரப்போவதாக தகவல் வெளியானது.
இந்நிலையில் “பாரீஸ் ஜெயராஜ்” படக்குழு இன்று செய்தியாளர்கள் சந்திப்பை நிகழ்த்தியுள்ளது. அப்போது பாஜகவில் இணைய உள்ளதாக செய்திகள் வெளியானது குறித்து நடிகர் சந்தானத்திடம் பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு மாநிலங்களவையில் எம்பி சீட் தருபவர்கள் கட்சியில் சேர தயார் என்று நகைச்சுவையாக பதிலளித்த சந்தானம், அரசியலில் ஈடுபடும் எண்ணம் எனக்கு இல்லை என்று கூறியுள்ளார்.