இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 227 ரன்கள் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படுதோல்வி அடைந்தது. 420 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால் 192 ரன்கள் மட்டுமே எடுத்தது. எனவே 227 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியாவிலும் இதேபோல் முதல் போட்டியில் தோல்வியடைந்த இந்தியா அதற்கு அடுத்த போட்டிகளில் தெறிக்கவிட்டது. அதேபோல இந்த போட்டியிலும் நடக்குமா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.