அதிமுகவிற்கு அதிக தொல்லை கொடுத்தது திமுகவை விட தினகரன் தான் என்று ஓ.எஸ் மணியன் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவை சில மாதங்களே உள்ளன. இந்நிலையில் அரசியல் காட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. இந்நிலையில் சொத்துகுவிப்பு வழக்கில் சிறை வாசம் அனுபவித்து வந்த சசிகலாவின் தண்டனை காலம் முடிந்து விடுதலையாகியுள்ளார். இதையடுத்து பெங்களூருவிலிருந்து சசிகலா சென்னை வந்துள்ளார். சசிகலாவின் வருகையால் தமிழக அரசியல் களத்தில் அடுத்தது என்ன நடக்கப்போகிறது என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இந்நிலையில் சசிகலா ஆதரவாளராக கருதப்பட்ட அமைச்சர் ஓ.எஸ் மணியன் அதிமுகவிற்கு திமுகவை விட அதிக தொல்லை கொடுத்தது தினகரன் எனவும், எதையும் சந்திக்க தயார் என்ற நிலையிலேயே முதல்வர் ஆட்சி நடத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.