இனிவரும் காலங்களில் தொழிலாளர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவர உள்ளது.
இனிவரும் காலங்களில் தொழிலாளர்கள் வாரத்தில் நான்கு நாட்கள் மட்டுமே வேலை செய்யும் திட்டத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வர இருக்கிறது. இந்த தகவலை மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் செயலாளர் அபூர்வ சந்திரா உறுதிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “தொழிலாளர்கள் வாரத்திற்கு 48 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது தற்போது நடைமுறையில் இருக்கிறது. அதில் எந்தவித மாற்றமும் இல்லை.
ஆனால் வேலை நேரத்தில் மட்டும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு 12 மணி நேரம் என்றால் நான்கு நாட்களும், 10 மணிநேரம் என்றால் ஐந்து நாட்களும், மேலும் எட்டு மணி நேரம் என்றால் 6 நாட்களும் வேலை செய்ய வேண்டும். இதில் தொழிலாளர்கள் முதலாளிகளுக்கு எந்தவித நிர்பந்தமும் இல்லை என்று தெரிவித்துள்ளார் . இதற்கு சிலரிடையே வரவேற்பு இருந்தாலும் வேலைவாய்ப்பு போகலாம் என்று வல்லுநர்கள் குறிப்பிட்டுள்ளனர்.