சாதாரண சண்டைக்காக நடத்துனரை வெட்டி கொன்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் வசிப்பவர் சந்தன மகாலிங்கம். இவர் சாத்தூர் பணிமனையில் அரசு போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று வீட்டிற்கு அவர் மது அருந்தி விட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவருடைய வீட்டு பக்கத்தில் மின்இணைப்பு வயர் வெட்டப்பட்டு வீட்டிற்கு கரண்ட் இல்லாமல் இருந்துள்ளது. எனவே ஏற்கனவே பக்கத்துக்கு வீட்டில் இருந்த முன்பகை காரணமாக தான் அவர்கள் மின் இணைப்பைத் துண்டித்துவிட்டுள்ளதாக நினைத்துள்ளார் சந்தனமாகலிங்கம்.
இதையடுத்து சந்தனமாகலிங்கம் பக்கத்து வீட்டில் போய் வாக்குவாதம் செய்துள்ளார். இந்நிலையில் பக்கத்து வீட்டை சேர்ந்த சந்திரசேகர், குணசேகரன் ஆகிய இருவரும் சந்தன மகாலிங்கத்தை அருகிலுள்ள காட்டுக்கு வா மோதி பார்க்கலாம் என்று அழைத்துள்ளனர். இதன் காரணமாக அருகே உள்ள சோழ காட்டிற்குள் சந்தன மகாலிங்கம் கட்டையுடன் சென்றுள்ளார். அங்கு அரிவாளுடன் இருந்த சகோதரர்கள் சந்திரசேகர், குணசேகரன் ஆகிய இருவரும் சந்தன மகாலிங்கத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்துள்ளனர்.
இதில் அவர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் சந்தன மகாலிங்கத்தின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக விருதுநகர் அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தப்பியோடிய சகோதரர்கள் இருவரையும் தேடி வருகின்றனர். சாதாரணமாக வாக்குவாதம் முற்றி கொலையில் முடிந்துள்ள இந்த சம்பவம் கிராம மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.