ஆந்திரப்பிரதேச முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை அரசியலில் களமிறங்க உள்ளதாக அறிவித்துள்ளார்.
ஒருங்கிணைந்த ஆந்திர பிரதேச மாநிலத்தின் மறைந்த முதல்வர் ராஜசேகர ரெட்டியின் மகன் ஜெகன்மோகன் ரெட்டி. தற்போது ஆந்திர பிரதேச மாநிலத்தின் முதல்வராக இருக்கிறார். காங்கிரஸ் கட்சியிலிருந்து பிரிந்து தனிக் கட்சி ஆரம்பித்து ஜெகன் மோகன் ரெட்டி ஆந்திராவில் ஆட்சியை பிடித்தார். தற்போது அவரது l சகோதரி ஷர்மிளா, தெலுங்கானா மாநிலத்தில் புதிய அரசியல் கட்சியை தொடங்குகிறார்.
தெலுங்கானாவில் தீவிர அரசியலில் இவர் ஈடுபட முடிவு எடுத்துள்ளார். புதிய கட்சி தொடங்குவது குறித்த ஹைதராபாத்தில் தனது வீட்டில் நலம் விரும்பிகளுடன் தற்போது ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். தெலுங்கானாவில் 2023 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.