Categories
சினிமா தமிழ் சினிமா

அஜித் ரசிகர்களுக்கு நல்ல செய்தி சொன்ன ‘மாஸ்டர்’ பட நடிகை… என்ன தெரியுமா?…!!!

நடிகர் அஜித் நடித்துவரும் ‘வலிமை’ படம் குறித்த முக்கிய தகவலை மாஸ்டர் பட நடிகை கூறியுள்ளார்.

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் ‘வலிமை’. ஹெச்.வினோத் இயக்கும் இந்தப் படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். கடந்த 2019 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்பட்டது . இதுவரை இந்த படத்தின்  எந்த ஒரு அதிகாரப்பூர்வ அப்டேட்டையும் படக்குழு வெளியிடவில்லை . வலிமை படத்தின் ஏதாவது ஒரு அப்டேட்டை வெளியிடுமாறு சமூக வலைதளங்களில்  ரசிகர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

சங்கீதா

இந்நிலையில் மாஸ்டர் படத்தில் மருத்துவராக நடித்த சங்கீதா தற்போது வலிமை படத்தில் நடித்து வருவதாக தெரிவித்துள்ளார் . மேலும் அவர் ‘வலிமை படம் 90 சதவீதத்திற்கும் மேலாக நிறைவடைந்துவிட்டது . விரைவில் படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாகும். இந்தப் படத்தில் நடிகர் அஜித்துடன் இணைந்து நடிக்கும் காட்சிகள் எனக்கு கிடைக்கவில்லை . இருப்பினும் இயக்குனர் வினோத்துடன் பணியாற்றியது மிகச் சிறந்த அனுபவமாக அமைந்தது’ என்று கூறியுள்ளார் .

Categories

Tech |