கார் மீது லாரி மோதிய விபத்தில் 5 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகத்தில் ஒரு காரில் 5 பேர் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது அவர்களின் பின்னால் வந்த லாரி ஒன்று எதிர்பாராதவிதமாக டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து அந்த காரின் மீது மோதி விட்டது. இந்த விபத்தில் அந்த காரில் பயணித்த 5 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டனர்.
இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் அந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடனடியாக அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.