Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

என்ன பண்ணியும் சரியாகல… ரொம்ப கஷ்டமா இருக்கு… பெண் எடுத்த விபரீத முடிவு…!!

தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்த பெண் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மானம்பதி பகுதியில் ஜெயவேல் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்ததால் அங்கு உள்ள மானாமதி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். ஆனால் இவருடைய வயிற்று வலி சரியாகவில்லை. இந்நிலையில் கடந்த 3ஆம் தேதி மன உளைச்சலில் லட்சுமி தனது வீட்டில் வைக்கப்பட்டிருந்த வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

இதனை அடுத்து மயங்கி கிடந்த அவரை அருகில் உள்ளவர்கள் மீட்டு மானாமதி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அதன் பிறகு மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட லட்சுமிக்கு, டாக்டர்கள் அளித்த சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்து விட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |