பிரபல சீரியல் நடிகை ராஷ்மி ஜெயராஜின் திருமண வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது .
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நாம் இருவர் நமக்கு இருவர்’ சீரியலுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர் . இந்த சீரியலில் தாமரை என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமடைந்தவர் நடிகை ராஷ்மி. கொரோனா ஊரடங்கிற்கு பிறகு இந்த சீரியலின் இரண்டு நடிகைகளும் திடீரென மாற்றப்பட்டனர். இதற்குக் காரணம் கொரோனா காலத்தில் தனது வீட்டில் படப்பிடிப்புக்கு அனுமதிக்கவில்லை என ராஷ்மி கூறியிருந்தார் .
இந்நிலையில் நடிகை ராஷ்மிக்கு ரிச்சு என்பவருடன் நேற்று கிறிஸ்தவ முறைப்படி மிக பிரமாண்டமாக திருமணம் நடைபெற்றுள்ளது . தற்போது இந்த அழகிய ஜோடியின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது . மேலும் ரசிகர்கள் இவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .