Categories
சினிமா தமிழ் சினிமா

திருமண நாளை ஜாலியாக கொண்டாடிய பிக்பாஸ் ரியோ … வைரலாகும் புகைப்படங்கள்…!!!

பிக்பாஸ் ரியோ தனது திருமண நாள் கொண்டாட புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் .

பிக்பாஸ் நிகழ்ச்சியின் நான்காவது சீசனில் கலந்துகொண்டு இறுதிப்போட்டி வரை சென்ற போட்டியாளர்களில் ஒருவர் ரியோ ராஜ். இவர் இந்த நிகழ்ச்சியின் போது பிக்பாஸ் முடிந்த பின்னர் காட்டுக்கு செல்வேன் என கமல்ஹாசனிடம் கூறியிருந்தார் . அதன்படி பிக்பாஸ் நிறைவடைந்த பின் தன் மனைவி மற்றும் மகளுடன் காட்டுக்கு சென்று நிம்மதியாக ஒரு சில நாட்கள் தங்கியிருந்த புகைப்படங்களையும், வீடியோக்களையும் தனது சமூக வலைதளப் பக்கத்தில் ரியோ வெளியிட்டிருந்தார் .

இந்நிலையில் சுற்றுப்பயணத்தை முடித்த ரியோ திருமண நாளை தனது மனைவியுடன் ஜாலியாக கொண்டாடியுள்ளார் . மேலும் அவர் தனது மனைவியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார் . இதையடுத்து சம்யுக்தா ,கேப்ரியல்லா, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பிக்பாஸ் போட்டியாளர்களும் ரியோவின் ரசிகர்களும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் .

Categories

Tech |